குடைமிளகாய் பொரியல் செய்ய தேவையான பொருள்கள் :
குடைமிளகாய் – 4
வெங்காயம் – 2
பொட்டு கடலை – 4 ஸ்பூன்
மிளகாய்த் தூள் – 2 ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
மஞ்சள் தூள் – 2 ஸ்பூன்
எண்ணெய்
கடுகு
கறிவேப்பிலை
உளுத்தம் பருப்பு
செய்முறை :
முதலில் குடைமிளகாய் மற்றும் வெங்காயத்தை சிறிதாக நறுக்கவும்.பொட்டுக்கடலையை பொடித்து வைக்கவும். கடாயில் தாளிக்க கொடுத்தவற்றைப் போட்டு தாளித்து, நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.
அதன் பின் தூள் வகைகளை சேர்த்து கிளறவும்.பின் குடமிளகாயுடன் உப்பு சேர்த்து 5 நிமிடங்கள் வதக்கவும். பின் பொடித்து வைத்த பொட்டு கடலைப் பொடியை சேர்த்து கிளறி அடுப்பிலிருந்து இறக்கவும்.சுவையான குடை மிளகாய் பொரியல் தயார்