அண்ணாச்சி அருள்சரவணன் டூயட் பாடல்கள் பொள்ளாச்சியில் படமாக்கப்பட்டு வருவதாக கூறப்படுகின்றது .
சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளரின் மகன் அண்ணாச்சி அருள் சரவணன். இவர் பல விளம்பர படங்களுக்கு முன்னணி நடிகைகள் பலருடன் டான்ஸ் ஆடி விளம்பரத்தில் நடித்து வந்தார். இதையடுத்து இவருக்கு திடீரென ஹீரோவாக வேண்டும் என்ற ஆசை வந்துள்ளது அதனால் பலர் அவரை ட்ரோல் செய்ய ஆரம்பித்துள்ளனர். ஆனாலும் அவர் எல்லா விளம்பரங்களிலும் நடித்து வந்துள்ளார். மேலும் அடுத்த கட்ட முயற்சியாக ஒரு படத்தில் கதாநாயகனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இவரை வைத்து விளம்பரப் படங்களை இயக்கிய இயக்குநர்கள் தான் இந்த படத்தை இயக்குகின்றனர்.
இதில் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். பாடலுக்கு வைரமுத்து என முன்னணி கலைஞர்களை படத்துக்கு ஒப்பந்தம் ஆகியுள்ளனர். கொரோனாவுக்கு முன்னதாக படப்பிடிப்பு பரபரப்பாக நடைபெற்று வந்துள்ளது. ஆனால் ஊரடங்கு காரணமாக படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது. தற்போது ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்டதால் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கியுள்ளது. படப்பிடிப்பு பொள்ளாச்சியில் நடைபெற்று வருகிறது. இரண்டு டூயட் பாடல்களுக்கு பல கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளது. பொள்ளாச்சியில் வைத்து எடுக்கப்படும் டூயட் பாடல்களில் அண்ணாச்சி கலக்கி வருகிறார்.