வாழைப்பழ பிஸ்கட் செய்ய தேவையான பொருள்கள் :
மைதா மாவு – 200 கிராம்
சர்க்கரை பொடி -100 கிராம்
வெண்ணைய் – 100 கிராம்
கார்ன்ப்ளேக்ஸ் -50 கிராம்
முந்திரி பருப்பு -25 கிராம்
பேக்கிங் பவுடர் – 1/2 ஸ்பூன்
உப்பு – 1 சிட்டிகை
பூவன் வாழைப்பழம் – 1 என்னம்
முட்டை – 1 என்னம்
வாழைப்பழ எசன்ஸ் – சில துளிகள்
முதலில் முந்திரியை பொடியாக்கவும். முட்டையை நன்கு அடித்துக் கொள்ளவும். மைதா மாவு, பேக்கிங் பவுடரை கலந்து சலிக்கவும். அதனுடன் உப்பு சேர்க்கவும்.
அதன் பின் வெண்ணையுடன் சர்க்கரையை பொடியை கலந்து நன்கு அடித்து முட்டை, எசன்ஸ் சேர்த்து கலக்கி இக் கலவையில் கார்ன் ப்ளேக்ஸ், முந்திரி பவுடர் சேர்த்து மைதாமாவு , வாழைப்பழம் சேர்த்து நன்கு பிசையவும்.
கலவை ஸ்பூனில் எடுக்கும் பதத்தில் இருக்க வேண்டும். நெய் தடவிய ட்ரேயில் கலக்கிய மாவை ஸ்பூனால் எடுத்து சின்ன சின்ன தாக பரவலாக வைக்கவும். ஓவனில் 300 டிகிரி பாரன்ஹீட்டில் 20 நிமிடம் வைத்து பரிமாறவும்.