கொரோனா தடுப்பூசி வினியோகிக்கும் பயோடெக் நிறுவனத்திற்கு சொந்தமானது போல செயல்பட்டு வந்த போலி நிறுவனத்தை அமெரிக்க அதிகாரிகள் முடக்கியுள்ளனர்.
கொரோனாவுக்கு எதிரான தடுப்பு ஊசிகளை வைத்து மோசடி செய்யும் வகையில் அமெரிக்காவில் இரண்டு இணையதளங்கள் இயங்கி வருவதை அதிகாரிகள் கண்டறிந்தனர். தடுப்பூசி வினியோகிக்கும் பயோடெக் நிறுவனத்தை போல் செயல்பட்டு இணையதளங்களை இயங்கி வந்துள்ளனர். இதனை அமெரிக்க அதிகாரிகள் முடக்கியுள்ளனர். இதுகுறித்து விசாரணை நடத்தியபோது முடக்கப்பட்ட இணைய தளங்களில் ஒன்று கோலாலம்பூரில் உள்ள ஒரு நிறுவனத்தின் மூலம் கடந்த 8ஆம் தேதி பதிவு செய்யப்பட்டது எனவும், அது பற்றி தனிப்பட்ட விவரங்கள் எதுவும் இல்லை என்று கூறப்பட்டுள்ளது.
இதேபோல் மற்றொரு இணையதளம் நைஜீரியாவை சேர்ந்த தனி நபரின் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. அமெரிக்காவில் தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கியிருக்கும் நிலையில் இணையதளங்கள் குறித்து எச்சரிக்கையாக இருக்குமாறு மேரிலாந்து அட்டார்னி ராபர்ட் ஹர் கூறியுள்ளார்.