புதுச்சேரியில் விரைவு பேருந்துகளை தனியாரிடம் அரசு கொடுக்க எதிர்ப்பு தெரிவித்து பேருந்து ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
புதுச்சேரி அரசு போக்குவரத்து கழக ஒப்பந்த ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். புதுச்சேரி அரசு சாலைப் போக்குவரத்து கழகத்தின் விரைவு பேருந்துகள் தனியாரிடம் அரசு கொடுக்க ஒப்பந்தம் தெரிவித்துள்ளது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்களும் உள்ளிருப்பு போராட்டம் காரணமாக பல்வேறு நகரப் பேருந்துகள் இயக்கப்படவில்லை. அனைத்து பேருந்துகளும் பேருந்து நிலையத்தில் முடங்கியுள்ளன.
இதனால் பொதுமக்கள் அனைவரும் குறிப்பிட்ட இடங்களுக்கு செல்வதில் மிகவும் அவதிப்பட்டு வருகிறார்கள். புதுச்சேரி அரசு இதற்கு ஒரு முடிவு தெரிவிக்கும் வரையில் போராட்டம் தொடரும் என ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்கள் அனைவரும் தெரிவித்துள்ளனர். இதனால் பயணிகள் அவதி அடைந்துள்ளனர்.