Categories
தேசிய செய்திகள்

கேரளாவை மிரட்டும் புதிய வைரஸ் தொற்று… நடுக்கும் உலக நாடுகள்…!!!

கேரள மாநிலத்தில் புதிதாக தொடங்கியுள்ள ஷிகெல்லா வைரஸ் தொற்றால் சிறுவன் ஒருவன் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் கடந்த 8 மாதங்களுக்கு மேலாக கொரோனா வைரஸ் தாக்கம் அதிகமாக உள்ளது. அது இன்னும் முழுமையாக கட்டுப்படுத்தப்படாத நிலையில் தற்போது புதிதாக ஷிகெல்லா வைரல் பரவிக்கொண்டிருக்கிறது. கேரள மாநிலத்திலுள்ள கோழிக்கோடு பகுதியில் இந்த புதிய வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. தற்போது வரை ஆறு பேருக்கு இந்த நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மேலும் 26 பேருக்கு இருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது. இந்த நோய் தண்ணீர் மற்றும் உணவு மூலம் பரவுகிறது. இந்த நோய் தொற்று காரணமாக வாந்தி மற்றும் காய்ச்சல் போன்ற அறிகுறிகள் தென்படுகின்றன.

இதுபோன்ற காரணங்களால் சில தினங்களுக்கு முன்னர் ஒரு சிறுவன் உயிரிழந்தான். ஆனால் அந்த சிறுவனுக்கு நோய்த்தொற்று எதுவும் உறுதி செய்யப்படவில்லை. இருந்தாலும் இதுபோன்ற அறிகுறிகள் இருந்ததால் இந்த நோய் தொற்றால் உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. அதனால் இந்த அறிகுறிகள் இருப்பவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு செல்ல வேண்டும் என சுகாதாரத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். மேலும் முறையான சிகிச்சை எடுத்துக் கொள்ளாவிட்டால் நீரிழப்பு மற்றும் சோர்வு காரணமாக உயிரிழக்கும் அபாயம் ஏற்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Categories

Tech |