அழகிப் போட்டியில் இரண்டாம் இடத்தை பிடித்தவர் தான் இஸ்ரேல் வம்சாவளியினர் என்று கூறியதால் கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளது.
பிரான்ஸில் உள்ள புரோவின்ஸ் என்ற பகுதியில் அழகிப்போட்டி ஒன்று நடத்தப்பட்டுள்ளது. அதில் இரண்டாம் இடம் பிடித்தவர் April beneyoum (21). இது குறித்து பேட்டியளித்துள்ள அவர், நான் இஸ்ரேலை சேர்ந்த வம்சாவளியினர் என்று கூறிவிட்டார். இதனால் அவருக்கு எதிரான விமர்சனங்கள் ட்விட்டரில் பரவ தொடங்கிவிட்டது.
இதனைத் தொடர்ந்து இந்த தகவலை கேட்ட பிரான்சின் அரசியல்வாதிகளும் அதிர்ந்துள்ளனர். இந்த விமர்சனங்கள் கடுமையானவை மேலும் இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்துள்ளதாக பிரான்ஸ் உள்துறை அமைச்சர் jerauld darmanin கூறியுள்ளார். மேலும் இது குறித்து காவல்துறையினர் விசாரித்து வருவதாகவும் அறிவித்துள்ளார். மேலும் இது குறித்து குடியுரிமை அமைச்சர் Marlene shiappa கூறுகையில் இது அழகிப்போட்டி தானே தவிர யூதர்களை விமர்சிப்பதற்கு ஆன போட்டி இல்லை என்று கூறியுள்ளார்.
ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் முன்னாள் பிரெஞ்சு உறுப்பினர் Renaud Musiliur “இதுபோன்ற விமர்சனங்கள் வெறுக்கத்தக்கவை” மேலும் ஏப்ரல் புரோவென்ஸ் பகுதியை சேர்ந்தவர் பிரெஞ்சு குடிமகளான அவர் இத்தாலி மற்றும் இஸ்ரேல் வம்சாவளியினர் இதன் அர்த்தம் அவர் முழுமையாக நம் நாட்டின் பிரதிநிதி என்பது தான் என்று விளக்கியுள்ளார்.