இன்றைய தினம் : 2019 மே 17
கிரிகோரியன் ஆண்டு : 137_ஆம் நாளாகும்.
நெட்டாண்டு : 138_ஆம் நாள்
ஆண்டு முடிவிற்கு : 228 நாட்கள் உள்ளன
இன்றைய தின நிகழ்வுகள் :
1498 – வாஸ்கோ ட காமா இந்தியாவின் கோழிக்கோட்டை அடைந்தார்.
1521 – பக்கிங்காமின் மூன்றாவது நிலை சீமானான எட்வர்ட் ஸ்டாஃபோர்ட் தேசத்துரோகக் குற்றம் சாட்டப்பட்டு தூக்கிலிடப்பட்டார்.
1536 – இங்கிலாந்தின் எட்டாம் என்றி மன்னர், ஆன் பொலின் ஆகியோரின் திருமணம் செல்லுபடியற்றதாக்கப்பட்டது.
1590 – டென்மார்க்கின் ஆன் ஸ்கொட்லாந்து அரசியாக முடி சூடினார்.
1792 – நியூ யோர்க் பங்குச் சந்தை ஆரம்பிக்கப்பட்டது.
1805 – முகமது அலி எகிப்தின் ஆளுநராக நியமிக்கப்பட்டார்.
1809 – பிரெஞ்சுப் பேரரசுடன் இத்தாலியின் திருச்சபை நாடுகளை இணைக்க முதலாம் நெப்போலியன் ஆணையிட்டார்.
1814 – நோர்வேயின் அரசியலமைப்பு சட்டம் கையெழுத்திடப்பட்டது. டென்மார்க் இளவரசர் கிறித்தியான் பிரெடெரிக் மன்னராக முடிசூடினார்.
1814 – மொனாக்கோவின் ஆட்சி பிரான்சிடம் இருந்து ஆஸ்திரியாவுக்குக் கைமாறியது.
1865 – அனைத்துலகத் தொலைத் தொடர்பு மையம் பாரிசில் அமைக்கப்பட்டது.
1902 – கிரேக்க தொல்லியலாளர் வலேரியோசு ஸ்தாயிசு பண்டைய தொடர்முறைக் கணினி ஆன்ட்டிகித்தீரா பொறிமுறையைக் கண்டுபிடித்தார்.
1915 – பிரித்தானியாவின் கடைசி லிபரல் கட்சி ஆட்சி வீழ்ந்தது.
1940 – இரண்டாம் உலகப் போர்: செருமனி பெல்ஜியத்தின் பிரசெல்சு நகரைக் கைப்பற்றியது.
1969 – சோவியத்தின் வெனேரா 6 விண்கலம் வெள்ளிக் கோளின் வளிமண்டலத்துள் சென்று அதனுடன் மோத முன்னர் வளிமண்டலத் தரவுகளை பூமிக்கு அனுப்பியது.
1974 – அயர்லாந்தில் டப்ளினில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 33 பேர் கொல்லப்பட்டனர்.
1980 – மாணவர் போராட்டத்தை அடக்குவதற்காக தென் கொரியாவில் இராணுவத் தளபதி சுன் தூ-குவான் ஆட்சியைக் கைப்பற்றி இராணுவச் சட்டத்தைப் பிறப்பித்தார்.
1983 – லெபனானில் இருந்து இசுரேல் வெளியேறுவதற்கான உடன்பாடு லெபனான், இசுரேல், அமெரிக்கா ஆகியவற்றுக்கிடையில் எட்டப்பட்டது.
1987 – ஈரான் – ஈராக் போர்: ஈராக்கிய போர் விமானம் ஒன்று அமெரிக்க கடற்படைக் கப்பல் மீது நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் 37 பேர் கொல்லப்பட்டனர், 21 பேர் காயமடைந்தனர்.
1990 – உலக சுகாதார அமைப்பின் பொதுச்சபை தற்பால்சேர்க்கையை உளநோய்களின் பட்டியலில் இருந்து நீக்கியது.
1992 – தாய்லாந்து பிரதமர் சுச்சிந்தா பிரப்பிராயூனுக்கு எதிராக நடந்த மூன்று-நாள் எதிர்ப்புப் போராட்டங்களில் இராணுவம் சுட்டதில் 52 பேர் கொல்லப்பட்டனர்.
1994 – மலாவிவில் முதல் தடவையாக பல-கட்சி பொதுத் தேர்தல் இடம்பெற்றது.
1997 – சயீர் காங்கோ மக்களாட்சிக் குடியரசு எனப் பெயர் மாற்றம் பெற்றது.
1998 – தமிழர் விடுதலைக் கூட்டணியின் யாழ்ப்பாண நகர முதல்வர் சரோஜினி யோகேஸ்வரன் சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.
2004 – அமெரிக்காவில் முதலாவது சட்டபூர்வ ஒருபால் திருமணம் மாசச்சூசெட்ஸ் மாநிலத்தில் நடைபெற்றது.
2006 – அமெரிக்க வானூர்தி தாங்கிக் கப்பல் ஒரிசுகானி மெக்சிகோ வளைகுடாவில் மூழ்கியது.
2007 – வட கொரியாவில் இருந்து தென் கொரியா வரையான தொடருந்து சேவை 1953 ஆம் ஆண்டுக்குப் பின்னர் முதல் தடவையாக இடம்பெற்றது.
2009 – தமிழினப் படுகொலை நாள். வன்னிப் போரில் பல்லாயிரக்கணக்கான தமிழ்மக்கள் இலங்கை அரசபடைகளால் படுகொலை செய்யப்பட்டனர். நான்காம் கட்ட ஈழப்போர் முடிவுக்கு வந்தது.
2014 – வடக்கு வாவோசில் இராணுவ வானூர்தி ஒன்று வீழ்ந்ததில் 17 பேர் உயிரிழந்தனர்.
இன்றைய தின பிறப்புகள்
1749 – எட்வர்ட் ஜென்னர், ஆங்கிலேய மருத்துவர், நுண்ணுயிரியலாளர் (இ. 1823)
1836 – ஜோசப் நார்மன் இலாக்கியர், ஆங்கிலேய அறிவியலாளர், வானியலாளர் (இ. 1920)
1858 – மேரி அடேலா பிளேக், ஆங்கிலேய வானியலாளர் (இ. 1944)
1873 – ஞானியார் அடிகள், சைவ மறுமலர்ச்சிக்கு உழைத்த துறவி, உரையாசிரியர் (இ. 1942)
1880 – சக்கரவர்த்தி நயினார், சமண அறிஞர் (இ. 1960)
1897 – தீரேந்திர வர்மா, இந்தியக் கவிஞர், மொழியியல் ஆய்வாளர் (இ. 1973)
1920 – பி. சாந்தகுமாரி, தென்னிந்திய நடிகை, பாடகி
1938 – கே. ஜமுனா ராணி, தென்னிந்தியத் திரைப்படப் பின்னணிப் பாடகி
1945 – பி. சி. சந்திரசேகர், இந்தியத் துடுப்பாளர்
1956 – சீனு மோகன், தமிழக மேடை, திரைப்பட நடிகர் (இ. 2018)
1967 – முகம்மது நசீது, மாலைத்தீவுகளின் 4வது அரசுத்தலைவர்
1974 – செந்தில் ராமமூர்த்தி, அமெரிக்க நடிகர்
1988 – நிக்கி ரீட், அமெரிக்க நடிகை, பாடகி
இன்றைய தின இறப்புகள்
1870 – இராதானாத் சிக்தார், வங்காள கணிதவியலாளர் (பி. 1813)
1930 – எர்பெர்ட்டு குரோலி, அமெரிக்கக் கல்வியாளர், இதழாளர் (பி. 1869)
1961 – மைசூர் வாசுதேவாச்சாரியார், கருநாடக இசைப் பாடகர் (பி. 1865)
1998 – சரோஜினி யோகேஸ்வரன், இலங்கைத் தமிழ் அரசியல்வாதி
2007 – நகுலன், தமிழக எழுத்தாளர் (பி. 1921)
2014 – சி. கோவிந்தன், தமிழறிஞர், புலவர்
2014 – சௌகான் மகாலத், லாவோஸ் அரசியல்வாதி (பி. 1955)
இன்றைய தின சிறப்பு நாள்
குழந்தைகள் நாள் (நோர்வே)
அரசமைப்பு நாள் (நவூரு)
விடுதலை நாள் (காங்கோ மக்களாட்சிக் குடியரசு)
உலக தகவல் சமூக நாள்