சென்னை வானகரம் ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி மண்டபத்தில் ஜனவரி 9ஆம் தேதி அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழுக் கூட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால், தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. அனைத்து கட்சியினரும் ஒருவரை ஒருவர் விமர்சித்து தேர்தல் பிரசாரத்தில் களமிறங்கியுள்ளனர். இந்நிலையில் சென்னை வானகரம் ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி மண்டபத்தில் ஜனவரி 9ஆம் தேதி காலை 8.50மணிக்கு அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என்று அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் ஈபிஎஸ், துணை ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் அறிவித்துள்ளனர்.
மேலும் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்தில், யார் யாருடன் கூட்டணி, வேட்பாளர்கள் தேர்வு மற்றும் தேர்தல் அறிக்கை உள்ளிட்ட பல முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.