Categories
உலக செய்திகள்

புதிய கொரோனாவின் வேகம்…. நீங்க வர வேண்டாம்…. இரண்டு நாட்டிற்கு தடைவிதித்த அரசு….!!

புதிய கொரோனா தொற்றின் வேகத்தினால் பிரிட்டன் மற்றும் தென்னாபிரிக்காவிலிருந்து வரும் விமானங்களுக்கு ஸ்விட்ஸ்ர்லாண்ட் தடை விதித்துள்ளது. 

பிரிட்டன் மற்றும் தென் ஆப்பிரிக்காவில் மிகவும் வேகமாக பரவக்கூடிய புதிய கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால் பலர் பாதிப்படைந்துள்ளனர். இதன் விளைவாக பல நாடுகள் பிரிட்டனிலிருந்து வருகின்ற விமானங்களுக்கு தடை விதித்துள்ளது. இதைதொடர்ந்து தற்போது பிரிட்டனில் மட்டும் அல்லாமல் தென் ஆப்பிரிக்காவிலும் இப்புதிய கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதனால் ஸ்விட்சர்லாந்து, இந்த இரு நாடுகளிலிருந்து வரும் விமானங்களுக்கு தடை விதிப்பதற்கு முடிவு செய்துள்ளது. இதனை தொடர்ந்து பிரிட்டன் மற்றும் தென் ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து வரும் விமானங்களுக்கு தடை விதித்துள்ளதாக நேற்று நள்ளிரவு அறிவித்துள்ளது. மேலும் விமானங்கள் மட்டுமின்றி சாலை ரயில் மற்றும் கடல் வழி போக்குவரத்து சேவைகளுக்கும் தடை விதித்துள்ளதாக தெரிவித்துள்ளது. இந்த புதிய வகை வைரஸானது ஸ்விட்சர்லாந்தில் இதுவரை  கண்டுபிடிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |