ஆக்ராவில் நடைபெறும் ‘ அத்ரங்கிரே ‘ படத்தின் படப்பிடிப்பில் ஷாஜஹான் கெட்டப்பில் அக்ஷய்குமார் வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
பாலிவுட் பிரபல நடிகர் அக்ஷய்குமார் நடிப்பில் தயாராகி வரும் திரைப்படம் ‘அத்ரங்கிரே’ . இயக்குநர் ஆனந்த் எல் ராய் இயக்கும் இந்தப் படத்தில் நடிகர் தனுஷ் மற்றும் நடிகை சாரா அலி கான் நடிக்கின்றனர். இரண்டு வெவ்வேறு காலகட்டங்களில் நடப்பது போல் கதை அமைந்துள்ள இந்தப் படத்தில் நடிகை சாரா அலி கான் 2 வேடங்களில் நடிக்கிறார்.
மதுரையில் நடைபெற்று வந்த இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்ததாக டெல்லியில் நடைபெற்றது. தற்போது டெல்லியில் படப்பிடிப்பை முடித்துவிட்ட படக்குழுவினர் ஆக்ரா சென்றுள்ளனர் . ஆக்ராவில் அமைந்துள்ள தாஜ்மஹால் அருகே படத்தின் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது . இந்நிலையில் நடிகர் அக்ஷய்குமார் ஷாஜகான் கெட்டப்பில் அசத்தலாக போஸ் கொடுத்து வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.