Categories
மதுரை மாவட்ட செய்திகள்

திறக்கப்பட்ட மதகு…” குளித்துக்கொண்டிருந்த 13 வயது சிறுவன்”… பின்னர் நேர்ந்த கொடூரம்..!!

குளத்தில் குளித்துக் கொண்டிருந்த சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டத்தில் உள்ள செம்பட்டி பகுதியை  சேர்ந்த தம்பதியர் சுரேஷ்குமார்-பூங்கொடி.தம்பியினருக்கு  3 மகன்கள் உள்ளனர்.சுரேஷ்குமார் கடந்த 2 மாதங்ககுக்கு முன்பு இறந்துவிட்டார். இவர்களின்  மூத்த மகன்  13 வயதுடையபிரேம்குமார் அப்பகுதியில் உள்ள பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வந்தான்.  இந்நிலையில் நேற்று காலை பூங்கொடி தனது மகன் பிரேம்குமார் உடன் அருகில் இருந்த குளத்திற்கு துணி துவைப்பதற்காக சென்றுள்ளார். அங்கு பூங்கொடி குளத்தின் கரையில் துணிகளை துவைத்துக் கொண்டிருந்தார்.  பூங்கொடிக்கு அருகில் பிரேம்குமார் குளித்துக் கொண்டிருந்தான்.

அப்போது அவன்  குளத்தின் ஆழமான பகுதிக்கு சென்றதால்  நீரில்  மூழ்கிய அவன் குளத்தின் மதகு பகுதிக்கு இழுத்து செல்லப்பட்டான். மதகில்  சிக்கிய பிரேம்குமாரால்  வெளியே வர இயலவில்லை. இதனால் அவன் அங்கேயே பரிதாபக உயிரிழந்தான். இதற்கிடையே தனது மகனை காணவில்லை என்று பதறிய  பூங்கொடி அக்கம்பக்கதினர்  உதவியுடன் குளத்தில்  தேடியுள்ளார். அப்போது மதகில்  சிக்கிய படி இறந்த நிலையில் கிடந்த பிரேம்குமாரை கண்டு பூங்கொடி கதறி அழுதார்.  இது குறித்து தகவலறிந்த  காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பிரேம்குமார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையில் சிறுவனின் தாயார் பூங்கொடி காவல் நிலையத்தில் புகாரளித்தார். அப்புகாரில்  நானும் எனது உறவினர்களும் குளத்தில் துணி துவைத்து கொண்டிருந்த போது முன்னறிவிப்பு இல்லாமல் ஆத்தூரை சேர்ந்த இருவர் அருகில் உள்ள குளத்திற்கு தண்ணீர் செல்வதற்காக நடுகுளத்தின் மடையை  திறந்து விட்டனர் அப்போதுதான் எனது மகன்  தண்ணீரில் இழுத்து செல்லப்பட்டு உயிரிழந்தான் . எனவே மதகை திறந்துவிட்ட இருவர் மீதும்  உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார். அவர் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |