துபாய் விமான நிலையம் அருகே சிறிய குட்டி விமானம் விழுந்து விபத்துக்குள்ளானதில் 4 பேர் பரிதாபமாக பலியாகியுள்ளனர்.
துபாயில் அமெரிக்க தொழில் நுட்ப நிறுவனம் ‘ஹனிவெல்’. இந்த நிறுவனத்திற்கு சொந்தமான சிறிய குட்டி விமானம் ஒன்று விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டது. இதில் இங்கிலாந்தை சேர்ந்த 3 பேரும், தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த ஒருவரும் பயணம் மேற்கொண்டனர்.இந்த சிறிய விமானம், விமான நிலையத்தின் ஓடுதளத்தில் இருந்து புறப்பட்ட சில நொடிகளில் திடீரென தரையில் வேகமாக விழுந்து நொறுங்கி தீப்பிடித்தது. இதனால் அந்த இடத்தில் பரபரப்பும் பதட்டமும் நிலவியது.
விமானம் விழுந்த உடனே அங்கு தயாராக இருந்த மீட்பு குழுவினர் மற்றும் தீயணைப்பு படையினர் வெகுவாக விரைந்து வந்து தீயை அணைத்தனர். இந்த விபத்தில் விமானத்தில் பயணம் மேற்கொண்ட 4 பேரும் பரிதாபமாக பலியாகினர். இந்த விபத்தினால் துபாய் சர்வதேச விமான நிலையத்தில் விமானங்கள் இயங்குவதில் தாமதம் ஏற்பட்டது. அதே நேரத்தில் சில விமானங்கள் வேறு வழியாக இயக்கப்பட்டன. விபத்தில் சேதமடைந்த விமானத்தின் பாகங்கள் அவ்விடத்தில் இருந்து அகற்றப்பட்டு நிலைமை சீரடைந்த பிறகு மீண்டும் செயல்பட தொடங்கியது. விமானம் விபத்துக்குள்ளானதற்கு தொழில் நுட்ப கோளாறே காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.