சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு குறித்து மத்திய கல்வித் துறை அமைச்சகம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த 8 மாதங்களாக பள்ளிகள் கல்லூரிகள் திறக்கப்படாமல் இருந்தது. மாணவர்கள் ஆன்லைன் மூலமாக கல்வி பயின்று வந்தனர். கொரோனா தொற்று காரணமாக பிப்ரவரி மார்ச் மாதங்களில் நடத்தப்படும் பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பிற்கான சிபிஎஸ்இ தேர்வுகள் இந்த வருடம் நடத்துவதற்கான அட்டவணை இன்னும் வெளியிடப்படாத காரணத்தால் தற்போது மாணவர்கள் மத்தியில் பெரும் குழப்பம் இருந்து வருகிறது.
இது குறித்து மத்திய கல்வி துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால் நிஷாங்க் கூறியுள்ளார். சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் “எழுத்து தேர்வு காகித முறையில் நடைபெறும் என உறுதிபட கல்வித்துறை அமைச்சகம்”தெரிவித்துள்ளது. இதனால் ஜனவரி மாதம் நேரடியாக மாணவர்கள் பள்ளிக்கு வரவழைத்து பொதுத் தேர்வுக்கு முந்தைய தேர்வுகளை நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.