Categories
தேசிய செய்திகள்

முதல்வருக்காக ஒரு பெண்ணை தத்தெடுத்த ரோஜா… குவியும் பாராட்டு…!!!

ஆந்திர மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் பிறந்தநாள் பரிசாக நடிகை ரோஜா ஒரு பெண்ணை தத்தெடுத்துள்ளார்.

ஆந்திர மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டிக்கு இன்று பிறந்த நாள் கொண்டாடப்பட்டு வருகிறது. அதனால் அம்மாநிலத்தில் நகரி தொகுதி எம்எல்ஏ மற்றும் நடிகையுமான ரோஜா, நீட் தேர்வில் நல்ல மதிப்பெண் பெற்றே நிதி நெருக்கடியால் மருத்துவ படிப்பை தொடர முடியாத ஒரு பெண்ணை தத்தெடுத்துள்ளார்.

மேலும் அப்பெண்ணின் மருத்துவ படிப்பிற்கான மொத்த செலவையும் தானே ஏற்றுக் கொள்வதாகவும், இது முதல்வருக்கு பிறந்தநாள் பரிசு என்றும் தெரிவித்துள்ளார். இதற்கு ஜெகன்மோகன் ரெட்டி நன்றி தெரிவித்துள்ளார். நடிகை ரோஜாவின் செயலுக்கு அனைவரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். அதுமட்டுமன்றி அவர் தத்தெடுத்த மாணவியின் குடும்பத்தினர் நன்றி தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |