Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

“வரதட்சனை பத்தல”… தொடர்ந்து டார்ச்சர்… திருமணமாகி சில மாதங்களில் புது பெண்ணின் விபரீத முடிவு..!!

வரதட்சணை கொடுமையால் இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அரக்கோணம்  பகுதியை சேர்ந்தவர் 26 வயதுடைய ஸ்ரீதர்.  இவரது மனைவி 20 வயதுடைய சினேகா . இருவருக்கும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் ஸ்ரீதர் தனது மனைவி சினேகாவிடம் அடிக்கடி கூடுதல் வரதட்சணை கேட்டு தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இதனால் சினேகா  தனது கணவரிடம்  கோபித்துக்கொண்டு மாறன்கண்டிகையில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்றார்.

அங்கு  தங்கியிருந்த சினேகாவை கணவருடன் சென்று குடும்பம் நடத்துமாறு அவரது பெற்றோர்கள் சமரசம் செய்து வந்தனர். ஆனால் பெற்றோரின் சமரசத்தை ஏற்க மறுத்த சினேகா கணவரின் வீட்டிற்கு செல்ல மறுத்துவிட்டார். இந்நிலையில் மனவேதனை அடைந்த சினேகா நேற்று முன்தினம் மாலை விவசாய நிலத்திற்கு சென்று வருவதாக கூறினார். ஆனால் நீண்ட நேரமாகியும் அவர் வீட்டிற்கு திரும்பி வரவில்லை.

இதனால் பதறிய அவரது பெற்றோர் அங்கு சென்று பார்த்தபோது சினேகா பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து விட்டு மயங்கி கிடந்தார். மயக்க நிலையில் இருந்த அவரை குடும்பத்தினர் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி சினேகா பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவலறிந்த காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |