வரும் ஜனவரி மாதம் முதல் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்படும் போடும் பணி தொடங்க வாய்ப்புள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் செய்தியாளர்களுக்கு பேட்டியில் அவர், இந்தியாவில் ஜனவரி மாதத்தில் எந்த வாரத்திலும் கொரோனா தடுப்பூசி பொதுமக்களுக்கு செலுத்த வாய்ப்பு உள்ளதாக தெரிவித்தார். முதற்கட்டமாக ராணுவ வீரர்கள், முன் களப்பணியாளர்கள், முதியோர்கள் உட்பட 30 கோடி பேருக்கு கொரோனா தடுப்பு ஊசி செலுத்தப்படும் என குறிப்பிட்ட ஹர்ஷ்வர்தன், கொரோனா தடுப்பூசித் தொடர்பாக மாநில – மாவட்ட அளவில் கடந்த நான்கு மாதமாக மத்திய அரசு ஏற்பாடு செய்து வருவதாகவும் தெரிவித்தார்.
முன்னணி நிறுவனங்கள் தடுப்பூசி தயாரிப்பில் ஈடுபட்டு வந்தாலும், தடுப்பூசியின் பாதுகாப்பு மற்றும் செயல்திறனுக்கு மட்டுமே அதிக முன்னுரிமை வழங்கப்படும் என்றும், அதில் சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை என்றும் அவர் திட்டவட்டமாக கூறினார். இந்தியாவின் கொரோனாவின் மோசமான காலம் நிறைவடைந்தாலும் மக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என சுகாதார அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தெரிவித்தார்.