பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் புது முல்லையாக நடித்துள்ள காவியா சூட்டிங் ஸ்பாட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் .
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த தொடரில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து வந்த சித்ரா கடந்த டிசம்பர் 9ஆம் தேதி தனியார் ஹோட்டல் ஒன்றில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் . இவரது திடீர் மரணம் ரசிகர்கள் மற்றும் பிரபலங்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் முல்லை கதாபாத்திரத்தில் வேறு யாரும் நடிக்க வேண்டாம் என ரசிகர்கள் கோரிக்கை விடுத்தனர் . அந்த அளவுக்கு முல்லையாக சித்ரா ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார்.
சமீபத்தில் பாரதிகண்ணம்மா தொடரில் நடித்து வரும் காவியா அறிவுமணி, பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் முல்லை கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது. இந்நிலையில் இதை உறுதி செய்யும் விதமாக காவியா அறிவுமணி இந்த தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் ஸ்ரீவித்யாவுடன் எடுத்துக்கொண்ட சூட்டிங் ஸ்பாட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் . சித்ரா ரசிகர்கள் பலர் வருத்தத்தில் இருந்தாலும் புதிய முல்லையாக காவியா நடிப்பதற்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர் .