பிக்பாஸில் இருந்து வெளியேறிய அர்ச்சனாவை அவரது குடும்பத்தினர் ஆரத்தி எடுத்து வரவேற்றுள்ளனர்.
பிக்பாஸ்-4 நிகழ்ச்சி 77 நாட்களை கடந்து பல திருப்பங்களுடன் மிக விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது . இதுவரை பிக்பாஸ் வீட்டில் இருந்து ரேகா, வேல்முருகன், சுரேஷ், சுசித்ரா ,சம்யுக்தா ,சனம், ரமேஷ், நிஷா ஆகியோர் வெளியேற்றப்பட்டுள்ளனர் . நேற்றைய எபிசோடில் அர்ச்சனா வெளியேற்றப்பட்டார். அர்ச்சனா வெளியேறுவதாக கமல் கூறியபோது போட்டியாளர்கள் அதிர்ச்சியாக இருந்தாலும் அர்ச்சனா மிக சந்தோஷத்துடன் இருந்தார்.
இந்நிலையில் தற்போது அர்ச்சனா தனது வீட்டிற்குள் சென்றவுடன் நடந்த நிகழ்வுகளை வீடியோவாக வெளியிட்டுள்ளார். அதில் அவரது குடும்பத்தினர் ஆராத்தி எடுத்து அவரை வரவேற்றுள்ளனர் . அவரது அன்பு மகளான சாராவை கட்டியணைத்து முத்தம் கொடுத்துள்ளார் . மேலும் அர்ச்சனாவின் செல்லப்பிராணி அவரை கண்டு துள்ளி குதித்து அவரருகே சுற்றி சுற்றி வருகிறது . இதன்பின் கேக் வெட்டி மகிழ்ச்சியாக கொண்டாடியுள்ளார் அர்ச்சனா . தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.