நடிகை ஆண்ட்ரியாவின் பிறந்தநாளுக்கு மாஸ்டர் படக்குழுவினர் சிறப்பு பரிசு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் நடிகர் விஜய் நடிப்பில் தற்போது தயாராகியுள்ள படம் ‘மாஸ்டர்’. இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இந்த படத்தில் விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், அர்ஜுன் தாஸ், சாந்தனு ,ஆண்ட்ரியா ,சஞ்சீவ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர் . இந்த படத்திற்கு ராக்ஸ்டார் அனிருத் இசையமைத்துள்ளார் . தீபாவளியன்று வெளியான இந்த படத்தின் டீசர் இணையத்தை தெறிக்க விட்டது .
சமீபத்தில் மாஸ்டர் படத்தின் தெலுங்கு டீசரும் வெளியாகி ரசிகர்களால் கொண்டாடப்பட்டது . இந்நிலையில் நடிகை ஆண்ட்ரியாவின் பிறந்தநாளான இன்று ‘மாஸ்டர்’ படக்குழுவினர் அவருக்கு சிறப்பு பரிசு ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதாவது மாஸ்டர் படத்தில் நடிகர் விஜய்யுடன் ஆண்ட்ரியா இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு பிறந்தநாள் வாழ்த்துக் கூறியுள்ளனர். தற்போது சமூக வலைத்தளங்களில் இந்த புகைப்படம் செம வைரலாகி வருகிறது.