சென்னை கடற்கரை அருகே பிரேக் பிடிக்காத மாநகர பேருந்து தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளானது.
சென்னை அண்ணா சதுக்கத்தில் இருந்து கேகே நகர் நோக்கி மாநகர பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. கண்ணகி சிலை அருகே சென்றபோது சரிவர பிரேக் பிடிக்காததால் சாலையின் நடுவே பழுதாகி நின்றது. போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் ஓட்டுநர் பேருந்தை உட்புற சாலையில் நிறுத்த முயன்றார். அப்போது முழுவதுமாக பிரேக் செயலிழந்து அங்கு நிறுத்தப்பட்டிருந்த 3 இருசக்கர வாகனங்கள் மோதியவாறு தடுப்பு சுவரில் மோதியது. இந்த விபத்தில் அதிஷ்டவசமாக உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை. விபத்து குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.