தமிழகத்தில் ஜனவரி முதல் டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழக டாஸ்மாக் மேற்பார்வையாளர், விற்பனையாளர், உதவி விற்பனையாளர்களுக்கு ஊதிய உயர்வு அறிவித்து மாநில வாணிபக் கழகம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி மேற்பார்வையாளருக்கு ரூபாய் 3000, விற்பனையாளருக்கு ரூபாய் 1000, புதன் விற்பனையாளருக்கு ரூபாய் 750 ஊதிய உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனவரி முதல் வாரத்தில் டாஸ்மாக் பணியாளர்களின் வங்கி கணக்கில் இந்த ஊதிய உயர்வை செலுத்த மாநில வாணிபக் கழகம் உத்தரவிட்டுள்ளது.