சிறுமி ஒருவர் தன்னுடைய அக்காவால் பாலியல் தொழிலுக்கு இழுத்து செல்லப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் வசிக்கும் 10ம் வகுப்பு படிக்கும் சிறுமி ஒருவரின் நடவடிக்கைகள் சில நாட்களாகவே சரியில்லாமல் இருந்துள்ளது. திடீரென்று வீட்டிலிருந்து காணாமல் போவது, வீட்டில் அனைவரிடமும் வித்தியாசமாக நடந்து கொள்வது என இருந்துள்ளார். இதனால் அந்த சிறுமியின் தாயாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ஒரு நாள் உறவினர் ஒருவரால் அந்த சிறுமி சாலையில் கடும் போதையான நிலையில் மீட்கப்பட்டுள்ளார்.
இதையடுத்து தன் மகள் போதைக்கு அடிமையானதை உணர்ந்த சிறுமியின் தாய் சிறுமிக்கு கவுன்சிலிங்க்காக அழைத்து சென்றுள்ளார். இந்நிலையில் கவுன்சிலிங்கில் போது அந்த சிறுமி 13 வயதிலேயே பாலியல் சீண்டலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார் என்பது தெரிய வந்துள்ளது. மேலும் சிறுமியின் 20 வயது சகோதரி அந்த சிறுமியை வலுக்கட்டாயமாக பாலியல் தொழிலுக்கு, முதன் முறையாக ரூ.2000 க்கு அந்த சிறுமியை பாலியல் தொழிலுக்காக அனுப்பியுள்ளார்.
அங்கு சிறுமிக்கு கஞ்சா கொடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து சிறுமி அடிக்கடி பாலியல் தொழிலுக்குச் சென்று கஞ்சாவிற்கு அடிமையாகியுள்ளார் என்ற அதிர்ச்சியான தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து தகவல் அந்த சிறுமியின் தாய் அதிர்ச்சியடைந்து காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். எனவே காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.