சர்க்கரை அட்டையை அரிசி அட்டையாக மாற்றத்தவர்களுக்கு பொங்கல் பரிசுத்தொகை கிடையாது அன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அரிசி ரேஷன் அட்டை உடைய குடும்பதாரர்களுக்கு பொங்கல் தினத்தையொட்டி பொங்கல் பரிசுத் தொகையாக ரூபாய் 2500 வழங்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தன்னுடைய பிரசாரத்தின்போது அறிவித்தார். மேலும் இது புயல், கொரோனா போன்றவற்றால் மக்கள் பாதிக்கப்பட்டதால் இந்த பரிசுத்தொகை வழங்கப்படுகிறது என்றும் அறிவித்தார். இந்நிலையில் பொங்கல் பரிசுத் தொகை பெறுவதற்காக சர்க்கரை அட்டையை, அரிசி அட்டையாக மாற்றினால் மட்டுமே கிடைக்கும் என்று கூறப்பட்டது.
இந்நிலையில் பொங்கல் பரிசுதொகை ரூபாய் 2500, விலையில்லா வேட்டி, சேலை மற்றும் ஒரு கிலோ அரிசி, ஒரு முழு கரும்பு, ஒரு கிலோ சர்க்கரை, திராட்சை, முந்திரி வழங்கும் திட்டத்தை முதல்வர் ஈபிஎஸ் நேற்று தொடங்கி வைத்தார். சர்க்கரை குடும்ப அட்டை வைத்திருப்பவர்கள் தகுதி அடிப்படையில் அரி அட்டையாக உடனடியாக மாற்ற வேண்டும் என்ற காலக்கெடு 20ம் தேதியுடன் முடிந்து விட்டது. பலர் இந்த காலக் கெடுவுக்குள் அரிசி குடும்ப அட்டையாக மாற்றவில்லை. இதனால் அவர்களுக்கு ரூபாய் 2500 வழங்கப்படமாட்டாது என்று தகவல் வெளியாகியுள்ளது.