மாம்பழ அல்வா தேவையான பொருள்கள்
மாம்பழத் துண்டுகள் – 4 கப்
சர்க்கரை – 2 கப்
பால் – 3 கப்
ஏலக்காய் தூள் – சிறிதளவு
நெய் – தேவைக்கேற்ப
செய்முறை :
முதலில் மாம்பழத் துண்டுகளை நன்றாக மசித்து வைத்து கொள்ள வேண்டும். மசித்து வைத்த மாம்பழங்களுடன் சர்க்கரையைப் போட்டு கிளறவும்
அதன் பின் பால் ஊற்றி மிதமான சூட்டில் கிளறவும். பாத்திரத்தில் கலவை ஒட்டாமல் இருக்க நெய்யை சேர்த்து கிளறவும். அதன்பின் கெட்டியான பதத்தில் வந்தவுடன் இறக்கி வைத்துவிட்டு.
அடுத்து ஆறிய பிறகு சிறுத் துண்டுகளாக வெட்டினால், சுவையான மாம்பழ அல்வா தயார்.