ரேஷன் கடைகளில் தொடர்ந்து மூன்று மாதங்கள் பொருட்கள் வாங்கவில்லை என்றால் உங்கள் ரேஷன் கார்டு செய்யப்படும் என தகவல் பரவிக் கொண்டிருக்கிறது.
நாட்டில் உள்ள மக்கள் அனைவரும் சமூக வலைத்தளங்களில் பரவும் செய்திகளை உண்மை என நம்புகிறார்கள். அதனை நம்பி சில முயற்சிகளையும் செய்கிறார்கள். அதன்படி கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் ரேஷன் கடைகளில் தொடர்ந்து மூன்று மாதங்கள் பொருட்கள் வாங்கவில்லை என்றால் உங்கள் ரேஷன் கார்டு ரத்து செய்யப்படும் என்று தகவல் பரவி வருகிறது.
அதைக் கண்டு மக்கள் அனைவரும் அச்சப்படுகிறார்கள். அது முற்றிலும் வதந்தியானது. இதை யாரும் நம்ப வேண்டாம் என பிஐபி தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்து உள்ளது. இவரைப்போல் செய்தி ஏதேனும் வந்தால் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.