Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

சுவையான காலிபிளவர் பஜ்ஜி… செய்து பாருங்கள் …!!!

காலிபிளவர் பஜ்ஜி செய்ய தேவையான பொருள்கள் :

காலிபிளவர்            –  1
கடலை மாவு          –  1 கப்
மைதா மாவு           –   4 மேசைக்கரண்டி
மிளகாய்த்தூள்      – தேவையான அளவு
உப்பு                            – தேவைக்கேற்ப
அரிசி மாவு              –   1  கப்

 செய்முறை :

முதலில் காலிபிளவரை சிறு சிறு பூக்களாக பிரித்தெடுத்துக் கொள்ளவும். கடாயில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடு செய்து கொள்ளவும்.

அதன் பின் கடலை மாவு,அரிசி மாவு, மைதா மாவு, மிளகாய்த்தூள், உப்பு ஆகியவற்றை ஒன்றாக கலந்து கொள்ளவும். இதனுடன் சூடான எண்ணெய் 4 தேக்கரண்டிக்கும் மேலாக எடுத்து மாவுடன் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.

பிறகு இதனுடன் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து தோசை மாவு பதத்திற்கு கரைத்துக் கொள்ளவும். பிரித்து வைத்துள்ள காலிப்ளவர் பூக்களை மாவில் நன்கு தோய்த்து எண்ணையில் இட்டு 5 நிமிடம் வரை வேக விட்டு பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.

அடுத்தது அடுப்பை மிதமான தீயில் வைத்து பொரிக்கவும். சூடான காலிபிளவர் பஜ்ஜி தயார்.

Categories

Tech |