Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

சுவையான செட்டிநாடு மிச்சர்… செய்து பாருங்கள் …!!!

செட்டிநாடு மிச்சர் செய்ய தேவையான பொருள்கள் :

கடலை மாவு                              – 3 கப்
அரிசி மாவு                                  –  1 கப்
பெருங்காயம்                             – தேவையான அளவு
கடலை பருப்பு                            –  2  கப்
அவுல்                                             –  2 கப்
கறிவேப்பிலை                          – தேவையான அளவு
மிளகாய் தூள்                           –  3 கப்
உப்பு                                                – தேவையான அளவு
எண்ணெய்                                  – தேவையான அளவு

செய்முறை :

முதலில் மிச்சர் செய்வதற்கு முழு முதல் தேவையானது ஓமப்புடி தான். அதை எப்படி செய்வது என்று பார்போம். ஓமப்புடி முதல் படியாக கடலை மாவு, அரிசி மாவு, உப்பு, இவை மூன்றையும் நன்றாக பிசைய வேண்டும்.

அதன் பின் நடுவில் சிறிது தண்ணீர் விற்று அதை பிசையவேண்டும், ஏனென்றால் அப்பொழுது தான் அந்த பக்குவம் வரும். இடியப்பம் பிழியும் இயந்திரத்தை எடுத்து அதில் இந்த கலவையை போட்டு, நன்றாக பிழியவேண்டும்.

பின்பு ஒரு வானொலியில் எண்ணையை ஊற்றி மிதமான சூட்டில் இந்த கலவையை பிழியவேண்டும். பொன்னிறமாக வந்த பிறகு அதை எடுத்து விடவும். பூந்தி ஒரு கப் கடலை மாவு எடுத்து கொண்டு, சிறிதளவு உப்பு சேர்த்து கட்டி இல்லாமல் பிசைந்து கொள்ளவும்.

பிறகு நடுவில் சிறிது தண்ணீர் விற்று அதை பிசையவேண்டும், ஏனென்றால் அப்பொழுது தான் அந்த பக்குவம் வரும். இந்த கலவை எப்படி இருக்க வேண்டும் என்றால் ஒரு தோசை மாவு பதத்தில் இருக்க வேண்டும்.

அடுத்து ஒரு வாணலியை தேவையான அளவு எண்ணையை ஊற்றி அதில் இந்த கலவையை ஒரு ஜல்லி கரண்டியில் ஊற்றி தனி தனியே பிரித்து போடவும். பொன்னிறமான பதத்தில் அந்த பூந்தி வந்தால் அதை எடுத்து வைத்து விடுங்கள்.

இதனை அடுத்து இவை இரண்டும் தயார் ஆனா பிறகு அவுல், கருவேப்பிலை, கடலை பருப்பு, பொட்டுகடலை, இந்த நான்கு பொருட்களையும் தனி தனியே எண்ணையில் போட்டு நன்றாக பொறித்து எடுக்க வேண்டும். கடலை பருப்பை பொரிக்கும் பொது மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் ஏனென்றால் அது வெடிக்கும் தன்மை கொண்டவை.

அடுத்தது அந்த ஓமப்புடி, பூந்து, எண்ணையில் பொரித்த உணவு பொருட்கள், இவை மூன்றையும் சேர்த்து, அதில் சிறிதளவு பெருங்காயம், உப்பு, காரத்திற்க்காக செட்டிநாடு மிளகாய் தூளையும் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும். சுவையான கார சாரமான செட்டிநாடு மிச்சர் தயார்.

Categories

Tech |