Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

சுவையான மூங்தால் ஃப்ரை… செய்து பாருங்கள் …!!!

மூங்தால் ஃப்ரை செய்ய தேவையான பொருள்கள் :

பாசிப்பருப்பு                                                 – 300 கிராம்
சமையல் சோடா                                      – 2 சிட்டிகை
மிளகாய்த்தூள், பெருங்காயத்தூள் – தேவையான அளவு
எண்ணெய்                                                    –  தேவையான அளவு
உப்பு                                                                  – சிறிதளவு

செய்முறை :

முதலில் பாசிப்பருப்பைக் கழுவி, பிறகு சமையல் சோடா சேர்த்து ஒரு மணி நேரம் நன்கு ஊறவிட்டு வடிகட்டி, ஈரம் போக நிழலில் உலர்த்தி எடுத்து கொள்ளவும்.

அதன் பின்  சூடான எண்ணெயில் சிறிது சிறிதாக போட்டு வறுத்து எடுக்கவும்.அதன் பின் மிளகாய்த்தூள், பெருங்காயத்தூள், உப்பு சேர்த்து குலுக்கிவிட்டு, காற்றுப்புகாத டப்பாவில் சேமிக்கவும்.

Categories

Tech |