தமிழகம் உட்பட 6 மாநில மக்களுக்கு பேரழிவு ஏற்படும் ஆபத்து இருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் உள்ள ஆறு மாநிலங்களில் மிகப்பெரிய பேரழிவை சந்திக்க உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி தமிழகம், கேரளா, குஜராத், மகாராஷ்டிரா, கோவா மற்றும் கர்நாடகா ஆகிய 6 மாநிலங்களின் நீர் கோபுரமாக விளங்கும் மேற்கு தொடர்ச்சி மலை பேரழிவை சந்திக்க உள்ளதாக யுனெஸ்கோ அறிக்கை வெளியிட்டுள்ளது.
காலநிலை மாற்றம், பலத்த மழை, நீர் மற்றும் காற்று மாசுபாடு, காடுகள் அழிப்பு, சுரங்கம், குவாரி மற்றும் காட்டுத்தீ போன்றவற்றால் பேரழிவை ஏற்படுத்துகின்றன. உடனடியாக பாதுகாப்பு நடவடிக்கைகளை செய்யவில்லை எனில், இந்த மழையை நம்பியுள்ள மக்கள் வாழ்க்கையும், அவற்றின் பல்லுயிர் பெருக்கம் மோசமாக இருக்கும் என எச்சரித்துள்ளது. இந்த திடீர் அறிவிப்பு பொது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.