Categories
அரசியல் மாநில செய்திகள்

கமல் ஆட்சிக்கு வந்தால்… 7 செயல்திட்டங்கள் வெளியீடு…!!!

தமிழகத்தில் கமல் ஆட்சிக்கு வந்தால் 7 முக்கியமான செயல் திட்டங்களை செயல்படுத்தப் போவதாக வாக்குறுதி அளித்துள்ளார்.

தமிழகத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதற்காக அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால், தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. மேலும் நாங்கள் வெற்றி பெற்றால் இதையெல்லாம் செய்வோம் என்று அனைத்து கட்சிகளும் வாக்குறுதி அளித்து வருகின்றன. அதன்படி மக்கள் நீதி மய்யம் ஆட்சிக்கு வந்தால் கமல் வாக்குறுதி அளிக்கும் ஆட்சிமுறை மற்றும் பொருளாதார புத்தெழுச்சிகான ஏழு செயல்திட்டங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.

அவை, நேர்மையான துரித நிர்வாகம். அனைத்து வீடுகளுக்கும் இணைய வசதி. நவீன தற்சார்பு கிராமங்கள். பெண் சக்தி மற்றும் பெண்கள் முன்னேற்றத்திற்கான செயல்திட்டங்கள். இல்லத்தரசிகளுக்கு ஊதியம். பசுமை புரட்சி பிளஸ். சூழலியல் சுகாதாரம். செழுமை கோடு (வறுமைக் கோட்டுக்குள் இருப்பவர்களை செழுமை கோட்டுக்கு கொண்டு வரும் திட்டம்) இவற்றையெல்லாம் கமல் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |