பிக்பாஸ் -4 நிகழ்ச்சியில் இன்றைய எபிசோடுக்கான முதல் புரோமோ வெளியாகியுள்ளது.
பிக்பாஸ் -4 நிகழ்ச்சி பல திருப்பங்களுடன் மிக விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் இன்றைய எபிசோடுக்கான முதல் புரோமோ வெளியாகியுள்ளது. அதில் இன்று போட்டியாளர்களுக்கு பால் கேட்ச் டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த டாஸ்க்கில் போட்டியாளர்கள் இரண்டு அணிகளாக பிரிய வேண்டும் . கார்டன் ஏரியாவில் வைக்கப்பட்டுள்ள குழாயின் வழியாக பந்துகள் அனுப்பப்படும் . சிறிய பந்துகளுக்கு 5 மதிப்பெண், பெரிய பந்துகளுக்கு 10 மதிப்பெண், அதைவிட பெரிய பந்துகளுக்கு 20 மதிப்பெண் . போட்டியாளர்கள் எத்தனை பந்துகளை பிடிக்கிறார்களோ அதற்கு ஏற்றவாறு அவர்கள் அணிகளில் மதிப்பெண் ஏறிக்கொண்டே இருக்கும் .
#Day79 #Promo1 of #BiggBossTamil #பிக்பாஸ் – தினமும் இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason4 #BiggBossTamil4 #VijayTelevision pic.twitter.com/uDCfyu7Md9
— Vijay Television (@vijaytelevision) December 22, 2020
இதில் விளையாடிக் கொண்டிருக்கும்போது ஆரி கேள்வி எழுப்ப ‘எங்களிடம் நீங்கள் கேள்வி கேட்கறத விட்டுட்டு உங்கள் அணியிடம் ஃபர்ஸ்ட் கேள்வி கேளுங்க’ என்கிறார் ரியோ.மேலும் ‘பாலா நடுவில் நிற்கிறார், ஆஜித் பின்னால் நிற்கிறார் நான் எங்கு நிற்க முடியும் ? என்று ரியோ ஆரிடம் ஆவேசப்படுகிறார் . வழக்கமாக பிக்பாஸில் எந்த ஒரு டாஸ்க்கும் சண்டையின்றி நிறைவடைந்தது இல்லை . அதேபோல் இந்த டாஸ்க்கிளும் போட்டியாளர்களுக்குள் மோதல் வெடிக்கும் என்பதில் சந்தேகமில்லை.