Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

இதுவரை வில்லனாக மிரட்டியவர் இனி ஹீரோவாக அசத்தப் போகிறார்… சோனு சூட்க்கு குவியும் பட வாய்ப்புகள்..!!!

பிரபல வில்லன் நடிகர் சோனு சூட்க்கு தற்போது ஹீரோவாக நடிக்க பட  வாய்ப்புகள் குவிந்து வருகிறதாம்.

தமிழ், ஹிந்தி ,தெலுங்கு ஆகிய மொழிகளில் வில்லனாக நடித்து மிரட்டியவர் சோனு சூட் . திரைப்படங்களில் மட்டும் தான் வில்லன் ஆனால் நிஜ வாழ்க்கையில் ஹீரோ . கொரோனா ஊரடங்கு போடப்பட்டிருந்த நிலையில் ஏழை மக்களுக்காக இவர் ஏகப்பட்ட உதவிகள் செய்துள்ளார் . தனது சொந்த செலவில் மக்களுக்கு உதவிகள் செய்து உண்மையான கதாநாயகனாக மாறினார் . தற்போது இவரது இமேஜ் மக்கள் மத்தியில் மாறிவிட்டதால் படங்களில் சோனு சூட்க்கு வில்லன் கதாபாத்திரங்கள் கொடுப்பதை இயக்குனர்கள் தவிர்த்து வருகிறார்களாம் .

மேலும் கொரோனா ஊரடங்கிற்க்கு முன்னதாக இவர் வில்லனாக நடித்துவந்த ‘அல்லுடு அதுர்ஷ்’ என்ற படத்தில் முற்றிலுமாக இவரது கதாபாத்திரத்தை மாற்றி விட்டார்களாம் . இந்நிலையில் இதுவரை வில்லனாக நடித்து வந்த நடிகர் சோனு சூட் க்கு தற்போது ஹீரோவாக நடிக்க படவாய்ப்புகள் குறைந்து வருகிறதாம். இதுகுறித்து சோனு சூட் ‘எனக்கு ஹீரோவாக நடிக்க பட வாய்ப்புகள் வந்துள்ளது. 5 நல்ல கதைகள் உள்ளது. இதை நான் ஒரு புதிய ஆரம்பமாக கருதுகிறேன். என் பெற்றோரின் ஆசிர்வாதம் பலன் அளித்துள்ளது’ என்று கூறியுள்ளார்.

Categories

Tech |