இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் மற்றும் நடிகர் சிவகார்த்திகேயன் கூட்டணியில் புதிய படம் தயாராகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன் . தற்போது இவர் நடிப்பில் அயலான் மற்றும் டாக்டர் திரைப்படங்கள் தயாராகிவருகிறது . இந்நிலையில் பிரபல இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் உருவாகவுள்ள புதிய படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் தற்போது லைவ் ஆக்சன் ஸ்டைலில் உருவாகும் அனிமேஷன் படம் ஒன்றை இயக்கும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார் . இதற்கு முன் தளபதி விஜய்யின் 65வது படத்தை இயக்குவதாக இருந்த ஏ.ஆர்.முருகதாஸ் திடீரென படத்திலிருந்து விலகிவிட்டார் .
சமீபத்தில் தளபதி 65 படத்தை இயக்குனர் நெல்சன் திலிப்குமர் இயக்குவதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது . இந்நிலையில் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ஒரு கமர்ஷியல் கதை கூறியதாகவும் அந்த கதை சிவகார்த்திகேயனுக்கு பிடித்திருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது . ஆனால் சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு தளபதி 65 படத்திற்காக சொன்ன கதையை தான் ஏ.ஆர்.முருகதாஸ் சிவகார்த்திகேயனுக்கு சொல்லியிருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளது . இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.