தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் தமிழக அரசியல் கட்சிகளுடன் தேர்தல் அதிகாரிகளுடன் இரண்டு நாள் ஆலோசனை நடத்தினார். இன்று விவிபேட் இயந்திரம் தொடர்பான கையேடு வாக்காளர் விழிப்புணர்வு குறும்படத்தை அதிகாரிகள் வெளியிட்டனர். பின்னர் தமிழக சட்டசபைத் தேர்தல் ஏற்பாடுகள் குறித்து ஆணைய அதிகாரிகள் விளக்கம்
இதில், செய்தியாளர்களை சந்தித்த, தேர்தல் ஆணைய செயலாளர் உமேஷ் சின்கா பேட்டியளித்தார். சட்டப்பேரவை தேர்தல் ஏற்பாடுகள் விதிமுறைகள் குறித்து அரசியல் கட்சியினர் அதிகாரிகளுடன் விவாதித்தோம். ஊரகப் பகுதி உட்பட அனைத்து பகுதிகளிலும் அனைவரையும் வாக்களிக்க செய்வதே இலக்கு. கொரோனா தொற்றுக்கிடையே பிகார் பேரவைத் தேர்தல், இடைத் தேர்தலை வெற்றிகரமாக நடத்தி உள்ளோம். கொரோனா பரவாத வகையில் தேர்தல் நடத்துவதே ஆணையத்தின் நோக்கம்.
80 வயதுக்கு மேற்பட்டோர் முதியோர் மாற்றுத் திறனாளிகளுக்கு தபால் வாக்கு செய்து தரப்படும். 80 வயதான வர்கள் தபாலில் வாக்களிக்கலாம் என தெரிவித்தனர். ஆயிரம் வாக்காளர்களுக்கு ஒரு வாக்கு சாவடி வீதம் வாக்குச்சாவடிகள் அமைக்கப்படும். தமிழகத்தில் முன்கூட்டியே தேர்தல் நடத்தப்படுமா என்பது பற்றி இப்போதே சொல்ல முடியாது. மூன்று ஆண்டுகளாக ஒரே இடத்தில் பணியாற்றுபவர்கள் பணி இடமாற்றம் செய்யப்படுவார்கள்.
பணப்பட்டுவாடா பரிசுப் பொருள் விநியோகம் போன்ற விதிமீறல்களை தேர்தல் ஆணையம் கண்காணிக்கும். பெரும்பாலான அரசியல் கட்சிகள் ஒரே கட்டமாக தேர்தல் நடத்த கோரிக்கை விடுத்துள்ளனர். அனைத்து வாக்குச் சாவடிகளிலும் சாய்வு தளம், கழிவறை, மருத்துவ வசதிகள் ஏற்படுத்தி தரப்படும். அரசியல் கட்சிகளின் கோரிக்கையை ஏற்று மரபுப்படி தமிழக சட்டமன்ற தேர்தல் நடத்தப்படும் என ஆணையர் தெரிவித்தார்.