பன்னீர் கட்லெட் செய்ய தேவையான பொருள்கள் :
பன்னீா் – 600 கிராம்
மஞ்சள் தூள் – 2 தேக்கரண்டி
உப்பு – தேவையான அளவு
வெங்காயம் – 5
பச்சை மிளகாய் – 8
கறிவேப்பிலை – 3 கொத்து
பூண்டு – 2 மேஜைக்கரண்டி
இஞ்சி – 2 மேஜைக்கரண்டி
சோம்பு தூள் – 2தேக்கரண்டி
கரம் மசாலா தூள் – 2 மேஜைக்கரண்டி
நல்ல மிளகு தூள் – 2 தேக்கரண்டி
உருளைக்கிழங்கு – 5
சோள மாவு – 5 மேஜைக்கரண்டி
உப்பு – தேவையான அளவு
பிரட் தூள் – 2 கப்
எண்ணெய் – பொரிக்க
முதலில் பச்சை மிளகாயை சிறிதாக நறுக்கிக் கொள்ளவும். வெங்காயத்தை வெட்டிக் கொள்ளவும். பூண்டு மற்றும் இஞ்சியை நன்கு நசுக்கி எடுத்துக் கொள்ளவும்.
பின்பு கடாயில் எண்ணெய் விட்டு சூடாக்கி வெங்காயம் பச்சை மிளகாய் கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும். சிறிது உப்பு சேர்க்கவும் ஒரு குக்கரில் உருளை கிழங்குடன் நீர் சேர்த்து வேக வைக்கவும்.2 விசில் வரும் வரை வைக்கவும்.
அதன் பின் வெங்காயம் லேசாக பொன்னிறமாளதும் இஞ்சி பூண்டு கலவையை சேர்க்கவும் அவை நன்கு வதங்கியதும் சோம்பு, கரம் மசாலா மற்றும் நல்ல மிளகு தூள் சேர்த்து வதக்கவும்.
அடுத்து பன்னீரை சிறு துண்டுகளாக வெட்டி கையால் படத்தில் உள்ளது போல் நசுக்கிக் கொள்ளவும். பின்பு அதனை வெங்காயக் கலவையுடன் சேர்த்து நன்கு கிளறவும்.
பிறகு மீண்டும் 3-4 நிமிடம் வேக வைக்கவும். பின்பு தீயை அணைத்து அதனை ஆற வைக்கவும். அவை ஆறுவதர்க்குள் உருளைகிழங்கை நன்கு மசித்துக் கொள்ளவும்.
பின்னர் பன்னீர் கலவையை உருளைகிழங்குடன் சேர்த்து நன்கு பிசையவும். பின்பு அதனை சிறு சிறு பகுதிகளாக பிரித்து படத்தில் உள்ளது போல் செய்து கொள்ளவும். பின்பு சோள மாவுடன் 4 கப் நீர் சேர்த்து கலக்கவும்.
அடுத்தது கட்லெட்களை சோள மாவுக் கலவையில் முக்கி பின்பு பிரட் தூளில் போட்டு எடுத்து அதனை எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்தெடுக்கவும். பன்னீர் கட்லெட் தயார்.