ரச மலாய் செய்ய தேவையான பொருள்கள் :
பால் – ஒன்றரை லிட்டர்
சீனி – 400 கிராம்
ஏலக்காய் – 5
குங்குமப் பூ – 1 கரண்டி
வினிகர் – 1 கரண்டி
முதலில் பாத்திரத்தில் ஒரு லிட்டர் பாலை ஊற்றி சுண்ட காய்ச்சவும். பின்பு அதில் வினிகரை ஊற்றி பாலை திரிய விடவும்.அந்த பால் திரிந்ததும் இறக்கி வைத்து ஒரு துணியில் போட்டு தண்ணீரை முழுவதுமாக வடித்து விடவும்.
அதன் பின் 10 நிமிடம் கழித்து தண்ணீர் வடிந்த பின்னர் தயாராக எடுத்துக் கொள்ளவும். ரசமலாய் செய்ய பனீர் தயார், பனீரை சிறு நெல்லிக்காய் அளவு எடுத்து உள்ளங்கையில் வைத்து அழுத்தி உருட்டி தட்டிக் கொள்ளவும்.
பின்பு அரை லிட்டர் பாலை ஊற்றி காய்ச்சவும். அதில் ஏலக்காய் பொடி, குங்குமப் பூ, சீனி சேர்த்து கலக்கவும்.
அடுத்து பால் நன்கு சுண்டியதும் அதில் செய்து வைத்திருக்கும் பனீர் தட்டைகளை போட்டு மூடி விடவும். 5 நிமிடம் கழித்து திறந்து மெதுவாக கிளறி விடவும்.சுவையான ரச மலாய் ரெடி.