Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

சுவையான வெல்ல போளி… செய்து பாருங்கள் …!!!

வெல்ல போளி செய்ய தேவையான பொருள்கள் :

கோதுமை மாவு          –  2 கப்
மண்டை வெல்லம்   –  1 கிலோ
ஏலக்காய்                       –   5
நல்லெண்ணெய்        – சிறிதளவு
தேங்காய்                       –  1
மஞ்சள் தூள்                –  2 சிட்டிகை
கடலைப் பருப்பு          – 2 கப்
சர்க்கரை                        – 2 தேக்கரண்டி
நெய்                                 – 3 மேசைக்கரண்டி

செய்முறை :

முதலில் கோதுமை மாவு அல்லது மைதாவுடன் மஞ்சள் தூள், உப்பு, சர்க்கரை, நெய் சேர்த்து தண்ணீர் ஊற்றி சப்பாத்தி மாவு போல பிசைந்து வைக்கவும். பின் மேலே சிறிது நல்லெண்ணெயை ஊற்றி 3 மணி நேரத்திற்கு அப்படியே வைத்திருக்கவும்.பின்னர் கடலைப்பருப்பை முக்கால் வேக்காடாக வேக வைத்து எடுக்கவும்.

பின்பு இதனுடன் நுணுக்கிய மண்டை வெல்லம் சேர்த்து தண்ணீர் தெளிக்காமல் மிக்ஸியில் ஒன்றும் பாதியுமாக‌ அரைத்து எடுக்கவும். பின்பு அதில் உப்பு சேர்த்து கலக்கவும். தேங்காயை துருவி நெய்யில் வதக்கி அரைத்து வைத்துள்ள பருப்பு, வெல்லக் கலவையுடன் சேர்த்து சிறிது நுணுக்கிய ஏலக்காயையும் சேர்த்து கலந்து சிறு உருண்டைகளாய் உருட்டி வைத்துக் கொள்ளவும்.

பின்னர் பிசைந்து வைத்த மாவை எண்ணெய் தடவிய பூரிப் பலகையின் மேல் சிறிது சிறிதாக உருட்டி எடுத்து கையால் விரித்து விடவும். அதன் நடுவில் கடலைப்பருப்பு, வெல்லம், தேங்காய்ப்பூ உருண்டையை வைத்து மூடவும்.

மீண்டும் அதை கையால் தட்டி அல்லது கட்டையால் உருட்டி சப்பாத்தி அளவிற்கு விரித்து விடவும். இதனை தோசை கல்லில் போட்டு, நெய் ஊற்றி இருபுறமும் சிவந்து வெந்ததும் எடுக்கவும். பின்பு பரிமாறவும்.

Categories

Tech |