தமிழகத்தில் டிசம்பர் 27-ஆம் தேதி முதல் லாரி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளனர்.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பெட்ரோல் டீசல் விலை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. அதனால் வாகன ஓட்டிகள் அனைவரும் மிகவும் அவதிப்பட்டு வருகிறார்கள். இந்நிலையில் டீசல் விலை உயர்வை திரும்பப் பெறுவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, டிசம்பர் 27-ஆம் தேதி முதல் லாரி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளனர்.
லாரி ஸ்டிரைக் காரணமாக நாளொன்றுக்கு 10 ஆயிரம் கோடி ரூபாய் உற்பத்தி பொருட்கள் தேக்கம் அடையும். அத்தியாவசிய பொருட்களின் விலை உயரும் என கூறப்படுகிறது. மேலும் லாரி ஸ்ட்ரைக் செய்வதற்கு ஆதரவாக டிசம்பர் 26 ஆம் தேதி முதல் லாரி புக்கிங் நிறுத்தப்படுவதாக புக்கிங் ஏஜென்ட்கள் சார்பாக மாநிலத் தலைவர் ராஜ வடிவேல் அறிவித்துள்ளார்.