Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

கிணற்று மண்ணை அள்ளியதால்… விவசாயிகளுக்கு இடையே ஏற்பட்ட தகராறு… பின்னர் நடந்த விபரீதம்..!!

கிணற்று மண்ணை அள்ளிய தகராறில் விவசாயி அடித்து கொலை செய்யப்பட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கடைக்கான்பட்டி கிராமத்தை  சேர்ந்தவர் 44 வயதுடைய மணிவேல் . இவரது பெரியப்பா மகன் 65 வயதுடைய சின்னையா. இவர்கள் இருவரும் விவசாயம் செய்து வந்தனர். இருவருக்கும் சொந்தமான கிணறு அப்பகுதியில் அமைந்துள்ளது. சில நாட்களுக்கு முன்பு கிணறு தூர்வாரப்பட்டதால் தோண்டப்பட்ட மண் அங்கு குவித்து வைக்கப்பட்டிருந்தது. மண்ணை அள்ளுவதில் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

இந்நிலையில் நேற்று சின்னையாவுக்கு தெரியாமல் மணிவேல் மண்ணை அள்ளி சென்றுள்ளார். இதனை அறிந்த சின்னையா மணிவேலிடம் சென்று கேட்ட போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் இருவரையும் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக நேற்று இரவு மீண்டும் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த இருவரும் ஒருவரையொருவர் சரமாரியாக  கட்டையால்   தாக்கி கொண்டனர்.

இந்த தகராறில் சின்னையா கட்டையை எடுத்து மணிவேலின்  நெற்றியில் அடித்துள்ளார். இதில்   பலத்த காயமடைந்த  மணிவேல் அங்கேயே மயங்கி விழுந்தார். இதனை பார்த்த அவரது உறவினர்கள்  மணிவேலை மீட்டு   சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மணிவேலை கொலை செய்த  சின்னையாவை கைது செய்தனர். மேலும் உயிரிழந்த மணிவேலின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Categories

Tech |