Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

இன்றைய (23-12-2020) நாள் எப்படி இருக்கும்..? இதோ உங்கள் ராசிக்கு…!!

இன்றைய  பஞ்சாங்கம்

23-12-2020, மார்கழி 08, புதன்கிழமை, நவமி திதி இரவு 08.40 வரை பின்பு வளர்பிறை தசமி.

ரேவதி நட்சத்திரம் பின்இரவு 04.32 வரை பின்பு அஸ்வினி.

நாள் முழுவதும் மரணயோகம்.

நேத்திரம் – 2.

ஜீவன் – 1/2.

தனிய நாள்.

புதிய முயற்சிகளையும் பயணங்களையும் தவிர்க்கவும்.

 

இராகு காலம் மதியம் 12.00-1.30,

எம கண்டம் காலை 07.30-09.00,

குளிகன் பகல் 10.30 – 12.00,

சுப ஹோரைகள் காலை 06.00-07.00, காலை 09.00-10.00,  மதியம் 1.30-2.00,  மாலை 04.00-05.00, இரவு 07.00-09.00,  11.00-12.00

 

இன்றைய ராசிப்பலன் –  23.12.2020

மேஷம்

உங்களின் ராசிக்கு குழந்தைகளால் வீண் விரயங்கள் இருக்கும். குடும்பத்தினரிடம் கருத்துவேறுபாடு உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும்.உத்தியோகத்தில் உடன் இருப்பவர்களை அனுசரித்துச் சென்றால் அனுகூலம் உண்டாகும். உத்யோகத்தில் தொழிலாளர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். லாபம் பெருகும்.

ரிஷபம்

உங்களின் ராசிக்கு வீட்டில் வெளியூர் பயணம் செல்ல வாய்ப்பு கூடும். உத்யோகத்தில் போட்டி பொறாமைகள் விலகும். வருமானம் இரட்டிப்பாகும். வெளிவட்டார நட்பு உண்டாகும். நண்பர்களின் உதவியால் கடன் பிரச்சனை நீங்கும். சிவ காரிய பேச்சுவார்த்தை நல்ல பலனை அளிக்கும்.

மிதுனம்

உங்களின் ராசிக்கு வீட்டில் மகிழ்ச்சியான நிகழ்ச்சி இருக்கும். புதிய பொருட்களை வாங்கி மாநில கூடும். உறவினர் வழியில் நல்ல செய்திகள் கிடைக்கும். உத்தியோகத்தில் முன்னேற்றத்திற்கான முயற்சி வெற்றியை கொடுக்கும். வராத கடன் அனைத்தும் வசூலாகும். பொன்னும் பொருளும் சேரும்.

கடகம்

உங்களின் ராசிக்கு வீட்டில் மாற்று கருத்தால் மனநிம்மதி குறையும். நண்பர்களின் வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்க தாமதம் ஆகும். உடல் நிலையில் கவனம் வேண்டும். உறவினர்கள் கைகொடுத்து உதவிக்கரம் நீட்டுவார்கள். தெய்வ வழிபாடு நன்மை தரும்.

சிம்மம்

உங்களின் ராசிக்கு மனதில் குழப்பம் கவலை அனைத்தும் இருக்கும். உடல் நிலையில் சிறு பாதிப்பு உண்டாகும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் சுப காரியங்களை தவிர்த்து விடுங்கள். பயணங்களில் கவனம் அவசியம். வெளியிடங்களில் வீண் வாக்குவாதம் வேண்டாம்.

கன்னி

உங்களின் ராசிக்கு பணப்புழக்கம் அதிகமாக இருக்கும்.தேவையான பொருட்களை வாங்கி மகிழும் கூடும். உற்றார் உறவினர் வருகை மகிழ்ச்சியை கொடுக்கும். உடனிருப்பவர்களின் ஆதரவால் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். தொழிலில் சிலருக்கு புதிய பொறுப்பு அமையும்.

துலாம்

உங்களின் ராசிக்கு செய்யும் செயல்களில் மனம் மகிழ்ச்சி இருக்கும். வீட்டில் பெரியவர்களின் அன்பு கூடும்.பூர்வீக சொத்துக்களில் எதிர்பாராத லாபம் உண்டாகும். புதிய தொழில் தொடங்கும் திட்டம் உண்டாகும். சேமித்து வைக்கும் அளவிற்கு வருமானம் பெருகும்.

விருச்சிகம்

இன்று குடும்பத்தில் தேவையில்லாத பிரச்சினைகள் ஏற்படலாம். உடன் பிறந்தவர்களுடன் ஒற்றுமை குறையும். வேலையில் பணிச்சுமை அதிகமாகும். குடும்பத்தில் பெண்கள் சிக்கனமாக செயல்படுவார்கள். தொழில் சம்பந்தமான வெளியூர் பயணங்களால் அனுகூலப் பலன்கள் கிடைக்கும்.

தனுசு

உங்கள் ராசிக்கு வீட்டில் உள்ளவர்களால் மருத்துவ செலவு இருக்கும். உறவினர்களிடம் மாறுபட்ட கருத்து இருக்கும். வெளியூர் பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். குழந்தைகள் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும்.சிந்தித்து செயல்பட்டால் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.

மகரம்

உங்களின் ராசிக்கு தொழில் கூட்டாளி களின் உதவியால் நல்ல லாபம் கிடைக்கும். வீட்டில் கருத்து வேறுபாடுகள் குறையும். எந்த வேலையிலும் சுறுசுறுப்புடன் இருப்பீர்கள். உடன்பிறந்தவர்களால் அனுகூலம் கிடைக்கும். புதிய பொருள் வாங்க ஆர்வம் கூடும்.

கும்பம்

உங்களின் ராசிக்கு வீட்டில் சிறு சிறு மனஸ்தாபம் இருக்கும். குழந்தைகளால் வீண் விரயம் உண்டாகும்.எடுக்கும் காரியங்களில் சற்று நிதானமுடன் செயல்பட்டால் நல்ல பலனை அடையலாம். சுபகாரிய நிகழ்ச்சியிலிருந்து தடை விலகும். முன்னேற்றம் அடைவீர்கள்.

மீனம்

உங்களின் ராசிக்கு எந்த செயலையும் முழு ஈடுபாட்டுடன் செய்து முடிப்பீர்கள். உற்றார் உறவினர் உங்களின் முயற்சிக்கு உறுதுணையாக செயல்படுவார்கள். நண்பர்களால் உதவி உண்டாகும். உதியோக ரீதியில் வெளியூர் பயணம் நல்ல பலனைக் கொடுக்கும். வீட்டுத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும்.

 

Categories

Tech |