இந்தியாவில் மோடி ஆட்சிக்கு வந்த பிறகு அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்து வருவதை குறிப்பிட்டு இது கொள்ளையடிக்கும் அரசு என கமல் குற்றம் சாட்டியுள்ளார்.
தமிழகத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்துக் கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால், தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. இந்நிலையில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், வெளிநாடுகளில் 34 ரூபாய்க்கு விற்கப்படும் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை, இந்தியாவில் மட்டும் 84 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது என்று தெரிவித்துள்ளார்.
மேலும் மோடி ஆட்சிக்கு வந்த பிறகு சிலிண்டர் விலையும் தொடர்ந்து உயர்ந்து வருவதை குறிப்பிட்டு இது கொள்ளையடிக்கும் அரசு என அவர் குற்றம் சாட்டியுள்ளார்.