பிரபல தமிழ் நடிகையான ரகுல் ப்ரீத் சிங்கிற்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ், தற்போது நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வருகின்றன. உலகில் ஏழைகள், பணக்காரர்கள், முக்கிய பிரபலங்கள் மற்றும் அரசியல் வாதிகள் என அனைவரையும் கொரோனா தாக்கி வருகிறது.
இந்நிலையில் நடிகை ரகுல் ப்ரீத் சிங்கிற்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். ஐதராபாத்தில் நடந்த மே டே படத்தின் படப்பிடிப்பில் அவர் நடித்து வந்த நிலையில், அவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் நான் என்னைத் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். நலமாக இருக்கிறேன். என்னை சந்தித்த அனைவரும் பரிசோதனை செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.