Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

தூங்கி கொண்டிருந்த சிறுவன்… வீட்டிற்குள் நுழைந்த கருந்தேள்… சிறுவனுக்கு நேர்ந்த சோகம்….!!

திண்டுக்கல் அருகே கருந்தேள் கடித்து  +1 மாணவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டி பகுதியை சேர்ந்த தம்பதியினர் சேவியர்- அமுதா. தம்பதியினருக்கு  ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர். சேவியர்  சேலத்தில் தங்கி கூலி வேலை செய்து வருகிறார்.இவர்களது மகள் பெங்களூரில் தங்கி படித்து வருகிறார். அமுதா தனது 16 வயது மகன்ஆண்டனி பிரபாகரனுடன் ரெங்கசாமிபுரத்தில் வசித்து வந்தார். ஆண்டனி பிரபாகரன் அங்குள்ள பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார். கடந்த சில நாட்களாக பெய்த தொடர் மழை காரணமாக அமுதாவின் வீட்டை சுற்றியுள்ள புதர்களில்  இருந்து ஏராளமான விஷ பூச்சிகள் வெளியேறி வீட்டை சுற்றி அலைந்து கொண்டிருந்தது.

இந்நிலையில் நேற்று இரவு அமுதாவும் ஆண்டனி பிரபாகரனும்  வீட்டிற்குள்  தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது வீட்டிற்குள் நுழைந்த  கருந்தேள் ஒன்று  ஆண்டனி பிரபாகரனை கொட்டியது. இதனால் வலியால் துடித்த பிரபாகரன் அங்கேயே மயங்கி விழுந்தார் . மயங்கிய அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர் . மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது இருப்பினும் பிரபாகரன் சிகிச்சை பலனின்றி  இன்று காலை பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |