Categories
சினிமா தமிழ் சினிமா

எப்படினாலும் அடிச்சு புடிச்சு விளையாடலாம்ன்னு சொன்ன ஆரி… உன்கிட்ட கேட்டது என் தப்புதாண்டா… கடுப்பான சோம்…!!!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்றைய எபிசோடுக்கான மூன்றாவது புரோமோ வெளியாகியுள்ளது.

பிக்பாஸ் -4 நிகழ்ச்சி பல திருப்பங்களுடன் மிக விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் இன்றைய எபிசோடுக்கான முதல் புரோமோவில் போட்டியாளர்களுக்கு பால் கேட்ச் டாஸ்க் கொடுக்கப்பட்டது. இந்த டாஸ்க்கில் போட்டியாளர்கள் இரண்டு அணிகளாக பிரிய வேண்டும் . கார்டன் ஏரியாவில் வைக்கப்பட்டுள்ள குழாயின் வழியாக பந்துகள் அனுப்பப்படும். அதில் போட்டியாளர்கள் எத்தனை பந்துகளை பிடிக்கிறார்களோ அதற்கு ஏற்றவாறு அவர்கள் அணிகளில் மதிப்பெண் ஏறிக்கொண்டே இருக்கும் .

அடுத்ததாக வெளியான இரண்டாவது புரோமோவில் சோம் மற்றும் ரியோவை வீழ்த்த ஆரி மற்றும் பாலா இருவரும் திட்டம் போடுகின்றனர் . தற்போது வெளியாகியுள்ள மூன்றாவது புரோமோவில் டாஸ்க் பஸர் அடித்தவுடன் போட்டியாளர்கள் டாஸ்க் நடைபெறும் இடத்திற்கு ஓடி வருகின்றனர் . இதில் அதிரடியாக விளையாடும்போது ரியோ கீழே விழுகிறார். இதன் பின் எப்படினாலும் அடிச்சு புடிச்சு விளையாடலாம் என்கிறார் ஆரி . இதையடுத்து சோம் மற்றும் ஆரி இடையே கடுமையான வாக்குவாதம் நடக்கிறது. இதனால் ‘உன்கிட்ட கேட்டது என் தப்புதாண்டா’ என்று கடுப்பாகிறார் சோம்.

Categories

Tech |