நடிகை சித்ராவுக்கு பதிலாக முல்லை கதாபாத்திரத்தில் நடிக்கும் காவியாவின் புது முல்லை புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அண்ணன், தம்பிகளின் உறவை எடுத்துக் கூறும் வகையில் அமைந்திருக்கும் கதை பாண்டியன் ஸ்டோர் சீரியல். இதில் முல்லை கதாபாத்திரத்தில் நடிகை சித்ரா நடித்து வந்தார். இவருக்கு ஜோடியாக குமரன் கதிர் கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். இதில் கதிர்-முல்லை ஜோடிக்கு ஒரு தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. இந்நிலையில் நடிகை சித்ரா தன்னுடைய கணவருடன் ஓட்டலில் தங்கி இருந்த நிலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
எனவே முல்லை கதாபாத்திரத்தில் யாரை நடிக்க வைப்பது என்று குழம்பிய நிலையில், தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாரதிகண்ணம்மா சீரியல் காவியா என்பவர் அறிவாக நடித்து கொண்டிருக்கிறார். இதனால் அவரை முல்லை கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க சீரியல் குழு முடிவு செய்து வருகின்றது. இந்நிலையில் புதுமையாக காவியாவை பாண்டியன் ஸ்டோர் எதிர்பார்ப்பது மட்டுமல்லாமல்,முல்லையாக மாறிய புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.