பாமக கட்சி தலைவர் டாக்டர் ராமதாசை சந்தித்து கூட்டணி தொடர்பாக பேச அதிமுக அமைச்சர்கள் சென்றுள்ளனர்
பாட்டாளி மக்கள் கட்சித்தலைவர் டாக்டர் ராமதாசை சந்திப்பதற்காக அவர் தங்கியிருக்கும் சைலபுரம் தோட்டத்திற்கு மின்சாரத்துறை மற்றும் உயர்கல்வித் துறை அமைச்சர்கள் சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிமுக கூட்டணியில் ஏற்கனவே பாமக நீடிப்பதாக கடந்த ஒரு வாரத்திற்கு முன்பாக மூத்த அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் தற்போது இந்த கூட்டணி பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளது தெரிய வருகிறது. அதனை தொடர்ந்து தான் சைலாபுரம் தோட்டத்திற்கு அமைச்சர்கள் கேபி அன்பழகன் மற்றும் தங்கமணி ஆகிய இருவரும் விரைந்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. வருகின்ற 27ஆம் தேதி அதிமுகவின் பிரச்சார பொதுக்கூட்டம் சென்னையில் தொடங்குகின்றது.
முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகிய இருவரும் இணைந்து அந்த பிரச்சாரத்தை தொடங்கி வைக்கின்றனர். அந்த கூட்டத்திற்கு அழைப்பு விடுக்க அமைச்சர்கள் சென்றிருப்பதாகவும் இன்னும் சிறிது நேரத்தில் அமைச்சர்கள் இருவரும் டாக்டர் ராமதாசை சந்தித்த கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர் என்பதும் தெரியவந்துள்ளது.