நடராஜனை பார்த்து கத்துக்கோங்க என்று கவாஸ்கர் கேப்டன் கோலியை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
கேப்டன் கோலி தலைமையிலான இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 நாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் ஒரு நாள் தொடரில் ஆஸ்திரேலியா அணியும், டி20 தொடரை இந்திய அணியும் கைப்பற்றியுள்ளது. இந்நிலையில் இரு அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்றது. இதில் முதல் ஒரு நாள் போட்டியில் இந்திய அணி மோசமான தோல்வி அடைந்ததால் கடும் விமர்சனத்திற்கு உள்ளானது. இதற்கிடையில் தனது மனைவிக்கு முதல் குழந்தை பிறக்க இருப்பதால் கோலி இரண்டாவது மற்றும் மூன்றாவது போட்டியில் கலந்து கொள்ளாமல் நாடு திரும்புகிறார்.
இந்நிலையில் இந்திய அணியின் சுனில் கவாஸ்கர் கூறுகையில், இந்திய அணிக்கு புதிதாக வந்தவர் தங்கராசு நடராஜன். இவர் டி-20 போட்டியில் மிகப் பிரமாதமாக ஆடினார். எனவே ஹர்திக் பாண்டியா தன்னுடைய தொடர் நாயகன் விருதை கூட நடராஜனுக்கு பகிர்ந்து கொள்ளும் அளவுக்கு அவரின் யாக்கர் நிறைந்த பந்துவீச்சு சிறப்பாக அமைந்தது. மேலும் ஐபிஎல் தொடரின் போதுதான் நடராஜனுக்கு தன்னுடைய முதல் குழந்தை பிறந்தது.
ஆனால் அவர் தன்னுடைய குழந்தையை பார்க்க உடனடியாக செல்லவில்லை. ஆஸ்திரேலிய தொடர் முடிந்த பிறகுதான் இந்தியா வந்து தன்னுடைய முதல் குழந்தையை முதல் முறையாக நடராஜன் பார்க்க .உள்ளார் ஆனால் கேப்டன் தன்னுடைய முதல் குழந்தையை பார்க்க முதல் டெஸ்ட் முடிந்ததுமே பார்க்க செல்ல இருக்கிறார். இவருக்கு ஒரு விதி, வீரருக்கு ஒரு விதியா? என்றும், கோலி அவர்களே நடராஜனை பார்த்து கத்துக்கோங்க என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.