Categories
சினிமா தமிழ் சினிமா

கார்த்தீஸ்வரன் இயக்கியுள்ள ‘பேய் இருக்க பயமேன்’… ரிலீஸ் தேதி அறிவிப்பு…!!!

இயக்குனர் கார்த்தீஸ்வரன் இயக்கியுள்ள ‘பேய் இருக்க பயமேன்’ படம் ஜனவரி 1ஆம் தேதி ரிலீஸாகும் என தகவல் வெளியாகியுள்ளது .

தமிழ் திரையுலகில் ஏராளமான காதல், ஆக்ஷன், காமெடி திரைப்படங்கள் வந்தாலும் திகில் திரைப்படங்களுக்கென ரசிகர்கள் மத்தியில் தனி வரவேற்பு உண்டு . தற்போது இயக்குனர் கார்த்தீஸ்வரன் இயக்கத்தில் தயாராகியுள்ள திரைப்படம் ‘பேய் இருக்க பயமேன்’ ‌ . இந்த படத்திற்கு கதை, திரைக்கதை மற்றும் வசனம் எழுதி இருப்பதும் கார்த்தீஸ்வரன் தான் ‌. இந்த படத்தில் காயத்ரி ரமா, கோதை சந்தானம், நெல்லை சிவா ,முத்துக்காளை உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர் .

2020 Albums Cinema Pei Irukka Bayamaen 6009 - Tamil Movie Pei Irukka  Bayamaen Stills

அபிமன்யு ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படத்திற்கு ஜோஸ் பிராங்கிளின் இசையமைத்துள்ளார். இந்த படம் குறித்து இயக்குனர் கார்த்தீஸ்வரன், ‘இது பிளாக் காமெடி வகையைச் சேர்ந்த படம். யாரும் பேயை பார்த்து பயப்படக்கூடாது. அது நம்முடைய அடுத்த பரிமாணம். குழந்தைகளை கவரும் விதத்தில் இந்த படத்தை உருவாக்கி இருக்கிறோம். மேலும் ஒரு மணி நேரத்திற்கும் மேலான கிராபிக்ஸ் காட்சிகள் இந்த படத்தில் உள்ளன’ என்று கூறியுள்ளார். இதையடுத்து இந்த படம் வருகிற ஜனவரி 1ஆம் தேதி ரிலீஸாகும் என தகவல் வெளியாகியுள்ளது .

Categories

Tech |