Categories
தேசிய செய்திகள்

பிரதமருக்கு 30,351 சதுர அடியில்…. பிரமாண்டமான 10 மாடிகள்…. கொண்ட கட்டிடம்…!!

பிரதமருக்கு பிரமாண்டமாக 10 மாடிகள் கொண்ட வீடு கட்டுவதற்காக 30,351 சதுர அடியில் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.

மத்திய விஸ்டா திட்டத்தின் கீழ் புதிய நாடாளுமன்ற கட்டிடம் 971 கோடி மதிப்பில் கட்டப்பட உள்ளது. இதே திட்டத்தின் கீழ் பிரதமர் மற்றும் துணை ஜனாதிபதி ஆகியோருக்கும் புதிதாக வீடுகள் கட்டப்பட உள்ளன. இதற்காக மத்திய பொதுப்பணித்துறை மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் மற்றும் வனத்துறை அமைச்சகத்திடம் சில பரிந்துரைகள் செய்யப்பட்டுள்ளன.

இதனடிப்படையில் பிரதமருக்கு பிரமாண்டமாக 10 மாடிகள் கொண்ட வீடு கட்டுவதற்காக 30,351 சதுர மீட்டர் அடியில் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் பிரதமருக்கு பாதுகாப்புத் தரும் சிறப்பு பாதுகாப்பு படையினருக்கும் 2.5 ஏக்கர் நிலத்தில் வீடு கட்டப்பட உள்ளது. இதில் பிரதமர் அலுவலகமும் கட்டப்பட உள்ளது. மேலும் இதே இடத்தில 15 ஏக்கரில் துணை ஜனாதிபதிக்கும் வீடு கட்ட பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

Categories

Tech |